கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. நாள்தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த எழுவரில், ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், V.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, V.களத்தூர் காவல் நிலையத்தில் அவருடன் பணிபுரிந்த காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என அனைவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.