விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில், சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் சக்திவேல் என்பவரது வயலில் பட்டறைப் போட்டு வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கிராம் சின்ன வெங்காயத்தை நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதனிடையே, இன்று மதியம் வயலுக்கு சென்று பார்த்த போது, சின்ன வெங்காயம் திருடுப் போனது கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.