பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் பகுதியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
'ஸ்டாலினைப் போலல்லாமல் மக்களோடு மக்களாகப் பணியாற்றுபவர் முதலமைச்சர் பழனிசாமி' - dmk president stalin
பெரம்பலூர்: திமுக தலைவரை போல் அறைக்குள் உட்கார்ந்து கணினி வாயிலாகத் தொண்டர்களைச் சந்தித்துவருவதைப் போல் இல்லாமல் மக்களோடு மக்களாகப் பணியாற்றுபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய ஆர்.டி. ராமச்சந்திரன் கூறியதாவது "அதிமுக தொண்டர்களால் வழி நடத்தப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினைப் போல் அறையில் உட்கார்ந்து கொண்டு கணினி வாயிலாகத் திருமண மண்டபத்தில் தொண்டர்களைக் கூட்டி சந்திப்பதை போலில்லாமல் மக்களோடு மக்களாகப் பணியாற்றுபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.