தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் அருகே அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது - perambalur

பெரம்பலூர் அரும்பாவூர் ஏரி நிரம்பியதில், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் விவசாயிகள்
பெரம்பலூர் விவசாயிகள்

By

Published : Nov 18, 2020, 12:31 PM IST

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பச்சைமலை பகுதி மற்றும் வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக பெரிய ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவந்த நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் பெரிய ஏரி முழுவதுமாக நிரம்பி தனது முழு கொள்ளவும் எட்டி, உபரி நீரானது கடைக்கால் வழியாக வெளியேறுகிறது.

அரும்பாவூர் ஏரி நிரம்பியதால் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details