பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது. இங்கு பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.
'பெரம்பலூரில் பெருகிவரும் மயில்கள்: சேதமாகும் பயிர்களை காக்க தேவை சரணாலயம்!' - அதிகரித்துவரும் மயில்கள்
பெரம்பலூர்: அதிகரித்துவரும் மயில்களால் சேதமாகும் பயிர்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என பெரம்பலூர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனிடையே, முன்பெல்லாம் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் மயில்கள் தற்போது இரைதேடி விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அதிகளவில் வருகின்றன. மேலும், தற்போது நிலவிவரும் வறட்சியான சூழ்நிலையில் தாங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயிரிட்ட பயிர்களை சேதப்படுத்தும் மயில்களிடமிருந்து காக்க விவசாய நிலங்களில் வேலி அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.
எனவே மயில்களை பாதுகாக்கவும், பயிர்கள் சேதமாவதை தடுக்கவும் சரணாலயம் அமைக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.