தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்ச புகார்: ஊராட்சி செயலாளரைப் பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்! - bribe issue panchyat secretary suspend

பெரம்பலூர்: லஞ்ச புகாரில் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஊராட்சி செயலாளர் வெங்கடேசுவரி
ஊராட்சி செயலாளர் வெங்கடேசுவரி

By

Published : Dec 3, 2020, 5:02 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராயப்பா நகரை சேர்ந்த கருப்பையா, கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி அப்போதைய ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரியிடம் விண்ணப்பித்து இருந்தார்.

கருப்பையாவை பின்தங்கிய பட்டியலில் சேர்ப்பதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரி தெரிவித்திருக்கிறார். தர மறுத்த கருப்பையாவிடம் மற்ற ஊராட்சிகளில் 30 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள், தான் மட்டும்தான் 15 ஆயிரம் வாங்குவதாகக் கூறி கறாராகப் பேசியுள்ளார்.

சில மாதங்கள் கழித்து வேறு வழி தெரியாமல் கருப்பையா ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரியிடம் 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடு வழங்காததால் ஊராட்சி செயலாளரிடம் கருப்பையா வீடு வழங்குங்கள், இல்லையென்றால் கொடுத்த பணத்தை தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஊராட்சி செயலாளரோ எதற்கும் பிடி கொடுத்து பேசாமல் காலத்தை கடத்தியுள்ளார். இதையடுத்து, ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருப்பையா மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். தன்னுடன் ஊராட்சி செயலாளர் பேசிய வீடியோவையும் கருப்பையா வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகவே, லஞ்ச புகார் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டார்.

தற்போது ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரி எறையூர் ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வந்த நிலையில் இந்தபணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details