பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (டிச. 09) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரம்பலூர்
பெரம்பலூர்: வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
Perambalur
அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடிந்து ஒரு வருட காலம் முடிவடையும் நிலையில், ஊராட்சிகளில் நிலப் பணிக்காக அரசிடமிருந்து நிதி ஊராட்சிகளுக்கு வருவதில்லை, ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும்,
ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய SFC நிதியை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளுக்கும் பாகுபாடில்லாமல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.