பெரம்பலூர் நகர்ப்புற பகுதி வெங்கடேசபுரம் தலையாட்டி சித்தர் ஆசிரமம் அருகில் நந்தீஸ்வரன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டிற்கு பெரம்பலூர் நகர்ப்புற பகுதி சங்கு பேட்டையைச் சேர்ந்த சண்முகவேல் உள்ளிட்ட நான்கு பேர் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர்.
மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு - பெயிண்டர் உயிரிழப்பு
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி சங்கு பேட்டையைச் சேர்ந்த சண்முகவேல் என்ற பெயிண்டர் உயிரிழந்தார்.
பெயிண்டர் உயிரிழப்பு
இந்நிலையில், சண்முகவேல் மின்மோட்டாரை ஆன் செய்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த சண்முகவேலின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஜார்கண்ட் கல்வி அமைச்சருக்கு சென்னையில் சிகிச்சை