தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு! - மாடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல்

பெரம்பலூர் : பெரம்பலூரில் மாடுகளிடையே வேகமாக பரவிவரும் அம்மை நோயை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூரில் மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு!
பெரம்பலூரில் மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு!

By

Published : Jul 29, 2020, 10:26 PM IST

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். தமிழ்நாட்டிலேயே இம்மாவட்டத்தில்தான் அதிகளவு பால் உற்பத்தி நடைபெறுகிறது.

இந்நிலையில் அம்மாவட்டத்தில் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர், பென்ன கோணம், அகரம் சீகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பசு மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஏறத்தாழ 150 க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி உள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை மூலம் எந்த வித விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அம்மை நோய் பரவல் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

கரோனா பாதிப்பு, ஊரடங்கு என தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து பெரம்பலூர் விவசாயிகள் தங்களது வாழ்வாதாராமான பால் உற்பத்தியை காக்க, கால்நடை நோய் தடுப்பு முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை துறை முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details