தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை விவசாயிகள் உருவாக்கிய 'உழவர் வேளாண் அங்காடி' - பெரம்பலூர் விவசாயிகள் செய்யும் சாதனை

பெரம்பலூர்: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து, இயற்கை சார்ந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் உழவர் வேளாண் அங்காடியை நிறுவினர்.

uzhavar velan angadi

By

Published : Nov 9, 2019, 2:09 PM IST

Updated : Nov 9, 2019, 2:17 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் இயற்கை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வளாகத்தில் உழவர்கள் அனைவரும் ஒன்றுகூடி உழவர் வேளாண் அங்காடி ஒன்றை திறந்துள்ளனர்.

பெரம்பலூர் மக்களுக்காக 'உழவர் வேளாண் அங்காடி' - விவசாயிகள் பெருமிதம்

இந்த இயற்கை வேளாண் அங்காடியில் மரபு அரிசி வகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய், பருப்பு, பயிர் வகைகள், நாட்டுச்சக்கரை, நாட்டு காய்கறி, மரபு நெல் விதைகள், இயற்கை இடுபொருட்கள், துணிப்பைகள் எனப் பல்வேறு வகை இயற்கைச் சார்ந்த பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இந்த இயற்கை வேளாண் அங்காடியில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் மக்களுக்காக 'உழவர் வேளாண் அங்காடி' - விவசாயிகள் பெருமிதம்

தற்போதைய காலகட்டத்தில் ராசாயனம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் பல விதமான நோய்கள் ஏற்பட்டு உயிர் விடும் நிலை ஏற்படுகிறது. சிறுவர்களுக்கு இயற்கை சார்ந்த வகையில் ஆரோக்கியமான உணவும் கிடைப்பதில்லை. இதுபோன்ற முயற்சியை நாமும் ஆதரிப்போம்.

Last Updated : Nov 9, 2019, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details