கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தாலும், டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 35 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் நல்லரிக்கை, பிலிமிசை, கல்பாடி, பாளையம் உள்ளிட்ட நான்கு கடைகளைத் தவிர்த்து மொத்தம் 31 கடைகள் திறக்கப்பட்டு, மது விற்பனையும் தொடங்கின. மேலும் பெரம்பலூரில் நான்கு ரோடு பகுதியில் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, பின்னரே வாங்கிச் சென்றனர்.
இதனிடையே சுமார் 40 நாள்களுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ‘குடி’மகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்