பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க மைய கட்டடத்தில் முகாம் அலுவலகக் கட்டடம், உலக சிந்தனை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் முகாம் அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து சாரணர் இயக்கம் மையக் கட்டடத்தில் உலக சிந்தனை நாள் விழா நடைபெற்றது.
பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாரண சாரணியர் இயக்க மாணவர்களுக்கு பல்வேறு கருத்தாலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து ஆளுநர் விருது பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு வழங்கப்பட்டது.
முகாம் அலுவலக கட்டட திறப்பு விழா மேலும் சாரணர் இயக்கத்தில் நீண்டகால சேவைபுரிந்தவர்களுக்கும் பாராட்டு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், சாரணர் இயக்க அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'