பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகேயுள்ள பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பெரம்பலூர் நாரணமங்கலம் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்ற அவர் வேலை முடிந்து நேற்றிரவு (மார்ச் 31) வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது இருசக்கர வாகனம் பெரம்பலூர் நான்கு சாலை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தலை நசுங்கி கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.