பெரம்பலூர் குன்னம் அருகேவுள்ள சடைக்கண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் பெரம்பலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று (செப்.26) காலை வழக்கம் போல் வேலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
குன்னம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது, மன்னார்குடியிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.