பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர், இன்று (ஆகஸ்ட் 29) மதியம் பரவாய் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பெரியசாமி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெரியசாமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.