தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிருடன் இருப்பவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! - பெரம்பலூர் செய்திகள்

பெரம்பலூர்: உயிருடன் இருக்கும் பெண் இறந்துவிட்டதாக அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

poster
poster

By

Published : Oct 10, 2020, 10:53 AM IST

பெரம்பலூர் நகர்ப்புற பகுதி இளம்பலூர் ரோடு பகுதியை சேர்ந்த, ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி அலுவலரின் மகளுக்கும், அவருடைய தாய் மாமன் மகனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் குழந்தை இல்லாத சோகத்தில், கடந்த மார்ச் மாதம் அப்பெண்ணின் கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். கணவர் இறந்த நிலையில், பெரம்பலூரில் உள்ள தனது பெற்றோருடன் இளம்பெண் வசித்து வருகின்றார்.

இதனிடையே, கடந்த ஏழாம் தேதி அந்தப்பெண் இறந்துவிட்டதாக, அவரது படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பெரம்பலூர் நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்துள்ளனர்.

உயிருடன் உள்ள இளம்பெண் ஒருவர் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நிகழ்வு, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தியானம் என்ற பெயரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அர்ச்சகர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details