வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சியானது தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறையின் மத்திய மண்டல துணை இயக்குனர் வழிகாட்டுதல்படி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.