தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலுாரில் 21 முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது - ஆட்சியர் அறிவிப்பு - ஆட்சியர் அறிவிப்பு

அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என பெரம்பலுார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No Online Classes
No Online Classes

By

Published : Sep 20, 2020, 1:22 AM IST

பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இன்று வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசின் ஆணை மற்றும் வழிகாட்டுதல் படி ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் மாணவ மாணவிகளின் நலன் கருதி வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details