பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதிமுக பிரமுகர் மீது, நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க சென்றபோது, அவரிடம் இருந்து புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் புகார் தெரிவித்த அருளை கைது செய்தனர்.
பாலியல் புகார் விவகாரம் - போலீஸ் பொய் புகார் என குற்றச்சாட்டு - பெரம்பலூர் பாலில் புதார்
பெரம்பலூர்: அதிமுக பிரமுகர் மீது பாலியல் புகார் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் காவல்துறை
மேலும் கைது செய்யப்பட்ட அருள், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று காவலர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னையில் அருள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.