பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட சித்த மருத்துவ வளாகத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா குத்து விளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
சித்த மருத்துவப் பிரிவுக்கான புதிய வளாகம் பெரம்பலூர் திறப்பு! ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் மரபு மருத்துவத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த சித்த மருத்துவப் பிரிவினை ஏற்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவ உதவிகளை பெறும் வகையில் நாள்தோறும் சித்த மருத்துவர்கள் வந்து சோதனைகளை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பொதுமக்களுக்கு சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டன மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற குறைத் தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்களுக்கும், மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கும் சித்த மருத்துவ பிரிவு சார்பில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அதற்குரிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் நடும் ஆட்சியர் இந்த நிகழ்வில் திட்ட அலுவலர் தெய்வநாயகி, சித்த மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் - பழ. நெடுமாறன்