மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இப்பாேராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டம்: மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்! - Humanist People's Party
மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து பெரம்பலூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சுல்தான் மைதீன் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், வேளாண் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:சர்க்கரை ஆலை பங்குதாரர்களின் 43ஆவது பேரவைக் கூட்டம்!