தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து காக்க வேப்பிலை தோரணம் - neem pole for corona

பெரம்பலூர்: கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்க வீடுகளில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்டியும், வீட்டின் முன்பகுதிகளில் மஞ்சள் நீர் தெளித்தும் மக்கள் தூய்மையை கடைபிடித்து வருகின்றனர்.

நாவலூர் கிராமத்தில் கரோனா நடவடிக்கை
நாவலூர் கிராமத்தில் கரோனா நடவடிக்கை

By

Published : Mar 28, 2020, 7:35 AM IST

நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை வைரஸ் தொற்றிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் வசிப்பவர்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்க வீடுகளில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்டியும், வீட்டின் முன் பகுதிகளில் மஞ்சள் நீர் தெளித்தும் தூய்மையை கடைபிடித்து வருகின்றனர்.

நாவலூர் கிராமத்தில் கரோனா நடவடிக்கை

மேலும் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணம் கட்டுவதன் மூலம் தங்களை எந்தவித நோய்களும் தாக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : 'காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’

ABOUT THE AUTHOR

...view details