பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாதத்தை யொட்டி விழிப்புணர்வு நடைப் போட்டி இன்று நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு தப்பாட்டம் இசைக்கப்பட்டது.
தேசிய ஊட்டச்சத்து மாதம்: நடைப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு! - தேசிய ஊட்டச்சத்து மாதம்
பெரம்பலூர்: தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அதன் விழிப்புணர்வு குறித்த நடைப் போட்டியில் பெண்கள் உட்பட பள்ளி மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்போட்டியை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியானது மாவட்ட ஆட்சியரகம், பாலக்கரை சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று கோட்டாச்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. முன்னதாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், சத்துணவு பணியாளர்கள், உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: வறுமை காரணமாக தத்துக்கொடுக்கப்பட்ட மகன், 40 ஆண்டுகளுக்கு பின் தாயை தேடி அலைமோதல்