நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி - தொடங்கிவைத்த எஸ்பி - தேசிய பெண் குழந்தைகள் தினம்
பெரம்பலூர்: தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
National Girl Child Day awarness rally
இந்தப் பேரணியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். இந்நிகழ்வில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், தொண்டு நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரியலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்!