பெரம்பலூர் மாவட்டம், திருவாளந்துறை கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர ராஜன் என்பவருடைய மனைவி சாந்தி பிரியா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நேரத்தில் பிரசவத்திற்குப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவமனைக்குச் செல்லும் நான்கு ரோடு பகுதியில், சாந்தி பிரியாவிற்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது.
108 அவசர ஊர்தியில் பிறந்த பெண் குழந்தை! - 108 அவசர ஊர்தியில் பிறந்த பெண் குழந்தை
பெரம்பலூர்: 108 அவசர ஊர்தியில் பிறந்த பெண் குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
![108 அவசர ஊர்தியில் பிறந்த பெண் குழந்தை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5165795-thumbnail-3x2-babybirth.jpg)
108 அவசர ஊர்தியில் பிறந்த பெண் குழந்தை
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 108 வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் ராஜா என்பவருக்கும், மருத்துவ உதவியாளர் இளையராஜாவுக்கும் அங்கிருந்தவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை - முட்புதரில் வீசிச் சென்ற கொடூரம்!