பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மனைவி ராணி(65) இவரது மகள் ராஜேஸ்வரி(35), தாய் மகளான இவர்கள் நேற்று (ஜூன் 18) இரவு தங்களது வீட்டு அறையில் மருந்து குடித்துவிட்டு இறந்த நிலையில் கிடந்தனர்.
தாயும் மகளும் தற்கொலை - காவல் துறை விசாரணை
பெரம்பலூர்: அய்யலூர் கிராமத்தில் நேற்றிரவு தாயும், மகளும் அவர்களது வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் ராணியின் இளைய மகள் இன்று(ஜூன் 19) காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது இருவரும் இறந்து கிடந்துள்ளனர். பின்னர் மருவத்தூர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ராஜேஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.