தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியரகத்தில் குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடித்த வனத் துறையினர் - ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

குரங்குகள்
குரங்குகள்

By

Published : Oct 12, 2020, 8:44 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, கருவூலத் துறை, சமூகநலத் துறை, தேர்தல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலகங்கள் இயங்கிவருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் மனு கொடுக்க வந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலர்களின் பைகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அட்டகாசங்களைச் செய்தன.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவின்பேரில் வனத் துறையினர், ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவாயிலில் கூண்டு வைத்து அட்டகாசம் செய்த பத்துக்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டுபோய்-விட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details