தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குணமடைந்தவர்களை பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய எம்.எல்.ஏ. - 20 பேரை வழியனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

பெரம்பலூர்: அரசு தலைமை மருத்துவமனையில் கரோனோ சிகிச்சை பெற்று வந்த 70 பேரில் குணமடைந்து வீடு திரும்பிய 20 பேரை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

குணமடைந்து வீடு திரும்பிய 20 பேரை பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர்  தமிழ்செல்வன்
குணமடைந்து வீடு திரும்பிய 20 பேரை பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன்

By

Published : May 13, 2020, 12:10 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 105ஆக உள்ளது. இவர்கள் தற்போது பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இன்று பெரம்பலூர் அரசு பொது தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 70 பேரில் கரோனோ சிகிச்சை முடிந்து 20 பேர் நலமுடன் இன்று வீடு திரும்பினார்கள். அவர்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பழங்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அதேபோல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனோவால் பாதிக்கப்பட்ட 105 பேரில் 97 பேர் சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details