பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (47). இவர் கடந்த மே 28ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் காணாமல் போனதாக ராஜலிங்கத்தை தேடிவந்துள்ளனர்.
இதனிடையே, பெரம்பலூரிலிருந்து ஆலம்பட்டி செல்லும் வழியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு, ஊடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.