பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆணை வழங்கும் விழா இன்று (ஜன.05) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், அங்குள்ள இரண்டாம் தளத்திற்குச் செல்வதற்காக அமைச்சர் சிவசங்கர் லிஃப்டில் சென்றார். அப்போது ஏற்பட்ட பழுது காரணமாக அமைச்சர் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக லிஃப்டிலேயே சிக்கிக் கொண்டார். தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்ட பிறகு அமைச்சர் சிவசங்கர் வெளியே வந்தார்.