தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் - அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர்: கரோனா தடுப்பு நடிவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Minister
Minister

By

Published : Jun 4, 2021, 7:56 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்கள், குடோன்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கரோனோ தொற்று பரவல் காரணமாக மக்களின் உயிரை காக்கும் பணியில் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மருந்தகங்களில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகள் வழங்ககூடாது. போலி மருத்துவர்கள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் கரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்திவிட்டு திட்டங்கள் ஒன்றாக பின் ஒன்றாக செயல்படுத்தப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details