பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சீர்மரபினர் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கரோனா தொற்று குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களிடம் தகவல் கேட்டறிந்தார்.
கரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு! - Backward Classes Welfare Minister Sivasankar inspect corona precautionary measure in perambalur
பெரம்பலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கரோனா தொற்று சிகிச்சைக்காகக் கூடுதல் வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
![கரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு! Minister Sivasankar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11924980-791-11924980-1622146620544.jpg)
தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கரோனா தொற்று சிகிச்சைக்காகக் கூடுதல் வசதிகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.