பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (ஆகஸ்ட் 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள பழைய சிறு ஆற்று பாலத்தை, வாகன போகுத்துவரத்துடன் கூடிய பெரிய பாலம் அமைப்பதற்காக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அமைச்சர் நேரு, நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரம்பலூர் நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில், கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வாகன வசதிகள் செய்து தரப்படும். மேலும், காலியாக உள்ள ஆணையர் பணியிடம் உடனடியாக நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவலருக்கு லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால் இளைஞர் தற்கொலை