பெரம்பலூர்:அதிமுக பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருப்பவர் ராஜாராம். இவர், சென்னை திரும்பும் சசிகலாவிற்கு ஆதரவாக "தாயை காத்த தாயே, கழகத்தை வழிநடத்த வருகை தரும் கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வருக வருக வெல்க" என வரவேற்று பெரம்பலூர் நகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் - எம்ஜிஆர் மன்ற செயலாளர்
பெரம்பலூரில் சசிகலாவை வரவேற்று மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
MGR Council Secretary pasting a poster welcoming Sasikala
முன்னதாக சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கும் அதிமுகவினர் மற்றும் அம்மா பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்த நிலையில், இவர் இந்த வகையில் போஸ்டர் ஒட்டியிருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.