தை மாதம் 2ஆம் நாள் விவசாயப் பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு செய்வதேயே மாட்டுப் பொங்கல் என்கிறோம். இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் மாட்டுப் பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
100 மாடுகளுக்கு ஒரே நேரத்தில் பூஜை - mattu pongal celebrated by private college in perambalur
பெரம்பலூர்: தனியார் கல்லூரியில் 100 மாடுகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் சிறப்புப் பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

100 மாடுகளுக்கு ஒரே நேரத்தில் பூஜை
தனியார் கல்லூரி வளாகத்திலுள்ள மாட்டுப் பண்ணையில் உள்ள 100 மாடுகளை குளிக்க வைத்து, வர்ணம் பூசி மாடுகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டின் போது பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிப் பொங்க கூடியிருந்த விவசாயப் பெருமக்கள் முழக்கமிட்டுக் கொண்டாடினர். இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர் சீனிவாசன் கலந்துகொண்டார்.