கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் எதுவும் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு வேலையில்லாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கமும், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 232 நியாயவிலைக் கடைகளில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 174 குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டு வருகின்றன.