தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. மாஸ்க் அணிவது, கிருமி நாசினி தெளித்து கைகளை சுத்தம் செய்தல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீம்ஸ் மூலம் கரோனா விழிப்புணர்வு - பெரம்பலூர் காவல் துறையினரின் புதிய முயற்சி
பெரம்பலூர் : மக்கள் மத்தியில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, திரைப்பட மீம்ஸ்களை பெரம்பலூர் காவல் துறையினர் உபயோகித்து வருகின்றனர்.
meme
இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினரின் திரைப்படங்கள் குறித்த மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களின் வழியாக அம்மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல் துறையின் இந்தப் புதிய முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.