புதுச்சேரி, தட்டன்சாவடி அருகே உள்ள சொக்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. கார் தரகராகிய இவர் தொழில் ரீதியாக அடிக்கடி பெரம்பலூர் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் வந்த அவர், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த விடுதி மேலாளர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்பு அங்கு வந்த காவல் துறையினர் அறையை திறந்து பார்த்தபொழுது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
கார் தரகர்-விடுதியில் தூக்கிட்டு தற்கொலை இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.