தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் அருகே டீக்கடையில் திருட்டு.. கையும் களவுமாக பிடிபட்ட திருடன் - in Thuraimangalam Near Perambalur

பெரம்பலூர் அருகே துறைமங்கலம் பகுதியில் டீக்கடை ஒன்றில் திருடியவரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 7, 2022, 6:54 PM IST

பெரம்பலூர்அடுத்த துறைமங்கலம்-திருச்சி சாலையில், கோட்ட பொறியாளர் அலுவலகம், எதிரே உள்ள சின்னையன் என்பவர் தனது டீக்கடையை, திறக்கசென்றபோது அங்கு ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே திருடிக் கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், அவரைக் கண்டதும் தப்பித்து ஓட முயன்ற திருடனை, புது காலனி பகுதியிலுள்ள பள்ளிவாசல் பகுதி பொதுமக்கள் துரத்திப்பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, டீக்கடையின் முன்பாக, அவரை அமர வைத்திருந்த நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கல்பாடி, தெற்கு தெருவைச்சேர்ந்த முத்து (எ) முத்துச்சாமி(52) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

பெரம்பலூர் அருகே டீக்கடையில் திருட்டு.. கையும் களவுமாக பிடிபட்ட திருடன்

இதையும் படிங்க: குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details