தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் கொடுப்பதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது - பாதிக்கப்பட்ட பெண்

கடன் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை கைதுசெய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

man-arrested
man-arrested

By

Published : Oct 1, 2020, 12:29 AM IST

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அருண் ஓட்டுநராக உள்ளார். இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரை வேலூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின், அதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அருணை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வீடு புகுந்து மிரட்டி பணம், நகை பறிப்பு - கந்துவட்டி அட்ராசிட்டி: ஆட்சியரிடம் பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details