தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1.85 கோடி மோசடி செய்த நபர் கைது! - அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1.85 கோடி மோசடி செய்த நபர் கைது!
அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1.85 கோடி மோசடி செய்த நபர் கைது!

By

Published : Oct 4, 2022, 10:14 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் மோகன்பாபு பி.பார்ம் படித்துள்ளார். இவருக்கு அரசு சுகாதார ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாக கூறி பிரகாஷ் என்பவர் 15 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

தான் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இணை செயலாளராக பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேர் நண்பர்கள் என்றும் பிரகாஷ் கூறி நம்ப வைத்துள்ளார். மேலும், மோகன்பாபுவின் மனைவிக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இதேபோல் மோகன்பாபுவின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 23 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக, 1 கோடியே 85 லட்சம் ரூபாயை வாங்கியதாக தெரிகிறது. பணத்தை வாங்கிய பிறகு, யாருக்கும் வேலை வாங்கித் தராமல் பிரகாஷ் தலைமறைவாகிவிட்டார். இதனால், பணம் கொடுத்தவர்கள் மோகன் பாபுவை தொந்தரவு செய்துள்ளனர்.

இதையடுத்து மோகன்பாபுவும், அவரது மனைவி சாருமதியும், பணத்தை வாங்கிச் சென்ற பிரகாஷ் சென்னை கோயம்பேட்டில் இருப்பதை கண்டு, அவரை காரில் பெரம்பலூருக்கு அழைத்து வந்து, தங்களது வீட்டில் வைத்திருந்தனர். இதனிடையே பிரகாஷின் உறவினர்கள் மோகன்பாபு அவரை கடத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மோகன்பாபுவின் வீட்டுக்கு சென்ற போலீசார், பிரகாஷை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சி சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மீது சிவகங்கை மற்றும் துறையூர் காவல் நிலையங்களில் ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ் மற்றும் அவரை வீட்டில் பிடித்து வைத்திருந்த மோகன்பாபு இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூடுதல் தலைமை ஆசிரியர் கைது

ABOUT THE AUTHOR

...view details