ஆத்தூரிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக சென்ற லாரியும், அரியலூரிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையம் அருகே இன்று காலைநடந்த இந்த பயங்கர விபத்தில் இரண்டு லாரிகளிலும் திடீரென தீ பிடித்தது. இதனையடுத்து, லாரி முழுவதும் மளமளவென தீ பரவியதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்; தீயில் கருகி நாசம்! - தீ விபத்து
பெரம்பலூர்: இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டு லாரிகளும் தீயில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு லாரிகளும் தீயில் கருகின. இந்த விபத்தில் டாரஸ் லாரி ஓட்டி வந்த சீனிவாசன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் ஆனதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.