தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மைதா மாவு ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம்! - Perambalur Lorry Fire Accident

பெரம்பலூர்: மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதம்.

பெரம்லூர் லாரி தீ விபத்து லாரி தீ விபத்து மைதா மாவு லாரி தீ விபத்து Lorry Fire Accident Perambalur Lorry Fire Accident Maida Lorry Fire Accident
Perambalur Lorry Fire Accident

By

Published : Mar 31, 2020, 3:43 PM IST

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையிலிருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி தீடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைக் கண்ட ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ பிடித்து எரியும் மைதா மாவு லாரி

ஆனால் அதற்குள் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு கருகி சேதமானது. இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆனைக்கட்டியில் காட்டுத் தீ: அரியவகை மரங்கள், உயிரினங்கள் நாசம்

ABOUT THE AUTHOR

...view details