தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடத்தகராறு: தீக்குளித்த மாமியார் மரணம், மருமகள் கவலைக்கிடம்! - perambalur

பெரம்பலூர்: இடத்தகராறு காரணமாக மாமியார், மருமகள் இருவரும் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

firing

By

Published : Sep 23, 2019, 8:08 AM IST

Updated : Sep 23, 2019, 12:16 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அல்லிநகரம் ஊராட்சியில் உள்ளது மேல உசேன் நகரம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, இவரது மருமகள் தங்க லட்சுமி.

இந்நிலையில், நேற்று மதியம் இவர்கள் இருவரும் இடத்தகராறு காரணமாக பூங்கொடியும் தங்க லட்சுமியும் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தீக்குளித்து தற்கொலை முயற்சி

இதனைத் தொடர்ந்து, மாமியார் - மருமகள் தீக்குளித்து பற்றி எரியும் அதிர்ச்சியளிக்கும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், தீக்குளித்த இருவரில் பூங்கொடி உயிரிழந்தார். தங்க லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

Last Updated : Sep 23, 2019, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details