விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் மழையை நம்பியே பெருவாரியான நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன இதனிடையே தற்போது ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஆனால், பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்படாமல் வாய்க்கால்கள் மட்டுமே தூர்வாரப்படுகின்றன. ஏரிகளை முழுமையாக தூர் வாரினால் மட்டுமே எதிர் வருகின்ற பருவமழையில் நீரை சேமிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.