தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்கள் முயற்சியால் தூர்வாரப்படும் ஏரி - தூர்வாரும் பணிகள்

பெரம்பலூர்: பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து சமூக நலக் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர்.

பொதுமக்கள் முயற்சியால் தூர்வாரப்படும் ஏரி

By

Published : Jun 26, 2019, 4:35 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, முன்னொரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 2 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைக்கக்கூடிய கொள்ளளவு கொண்டது.

இந்த எரி தூர் வாரப்படாமல் இருந்த நிலையில், தற்போது பெரம்பலூரைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்களின் முயற்சியால் சமூக நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி, நீர் நிலைகளை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை தூர் வாரி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details