கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மூடப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கரோனா வைரஸ் எதிரொலி: பெரம்பலூரில் 43 கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
பெரம்பலூர்: இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான 43 கோயில்களில் பக்தர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
korona effect temple close
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 43 கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த திருக்கோயிலின் செயல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.