உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழ்நாடு முழுவதும் வணிக வளாகங்கள், கோயில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
மேலும் பெரம்பலூர் அருகே அயலூர் கிராம மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் வேப்பிலைத் தோரணங்களைக் கட்டி வீடுகளில் மஞ்சள் கலந்த தண்ணீரை செம்புகளில் வைத்துள்ளனர்.