தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா! - kids Park open at old bus stand in Perambalur

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்துவைத்தார்.

குழந்தைகள் விளையாட்டு பூங்கா திறப்பு
குழந்தைகள் விளையாட்டு பூங்கா திறப்பு

By

Published : Aug 17, 2020, 3:31 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இங்கு புகார் கொடுக்க வரும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா அமைத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் திட்டமிட்டார்.

அதன்படி அனைத்து மகளிர் காவல் நிலையதில் ரூ.56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.

அதற்கான திறப்பு விழா இன்று (ஆக. 17) காவல் நிலையத்தில் நடைபெற்றது.

குழந்தைகள் விளையாட்டு பூங்கா திறப்பு

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு குழந்தைகள் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகளின் மனநிலை பாதிக்காமல் இருக்க இந்த பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், சிறுவர்கள் கதை புத்தகம் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலையரசி உள்ளிட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் போக்குவரத்து பூங்கா திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details