தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் மனு! - keela perambalur farmers protest

பெரம்பலூர்: ஆதி திராவிட மக்களுக்காகப் புதியதாக இலவச வீட்டு மனைகள் வழங்கும் திட்டத்திற்கு விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ol
frice

By

Published : Sep 14, 2020, 4:14 PM IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ''ஆதி திராவிட மக்களுக்குப் புதியதாக இலவச வீட்டு மனைகள் வழங்கும் திட்டத்திற்காக, நாங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விளைநிலங்களை கைப்பற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details